வடகொரியாவில் கொரியன் சீரிஸ் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கிம் ஜொங்-உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடந்துவரும் வடகொரியாவில் இன்டர்நெட், சமூக வலைதளங்கள் என எதுவும் கிடையாது. கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய குறைவான டிவி சேனல்கள் மட்டுமே இன்றும் இயங்கி வருகின்றன.
இதனால், சீனா மற்றும் தென் கொரியாவின் சினிமா, வெப் சீரிஸ்களின் சிடிக்களை சீன எல்லையின் வழியாக மறைமுகமாகக் கொண்டுவந்து அதை மக்கள் வாங்கிப் பார்ப்பார்கள்.
இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும்விதமாக அதிபர் கிம் ஜொங்-உன் வெளிநாட்டு படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைப் பார்க்க சமீபத்தில் தடை விதித்தார்.
மீறிப் பார்ப்பவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு சிறைவாசம் மற்றும் அதை அதிக அளவில் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும் இதை கண்காணிக்கத் தனிக்குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.