24 September, 2023

ஜி.பி.முத்து பற்றிய உண்மைகளை உடைத்த வனிதா! அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்…கிராமத்து வெள்ளந்தி

நடிகை வனிதா ஜி.பி.முத்து பற்றி சில விசயங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறில் பெரிதும் மக்களை கவர்ந்த போட்டியாளர் என்றால் அது ஜி.பி.முத்து என்று யோசிக்காமல் கூறிவிடலாம்.



அவரை நடிகர் கமல் அறிமுகப்படுத்திய அன்றிலிருந்தே கன்டென்ட் கொடுக்க துவங்கிவிட்டார்.

இந்நிலையில் இதற்கு முன்னர் ஒரு சீசனில் பங்கு பெற்ற நடிகை வனிதா அவர்கள் ஜி.பி.முத்துவை பற்றி பெருமையாக கூறியிருக்கிறார்.

பொதுவாக நகைச்சுவையாளர் என்றால் மக்களை சிரிக்க வைப்பதற்காக தங்களது உயிரையும் கொடுக்கத் துணிவார்கள்.

ஜி.பி.முத்து ஒரு அறிவாளி
மற்றவர்களை சிரிக்க வைக்க கூடிய அறிவு ஒருத்தருக்கு இருந்தால் மட்டுமே அதனை செய்ய முடியும். அந்த வகையில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் இவ்வளவு மக்களை கவர்ந்திருக்கிறார் என்றால் ஜி.பி.முத்து ஒரு அறிவாளிதான்.



அவரை அப்பாவி என்று கூறலாம். ஆனால் ஒன்றும் தெரியாதவர் என்று கூறி விட முடியாது.

கிராமத்திலிருந்து வந்த ஒரு வெள்ளந்தியான மனிதனாகவே ஜி.பி.முத்து எனக்கு தெரிகிறார்.

ஆனால் அவரை மற்ற போட்டியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.

அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று வனிதா கூறியிருக்கிறார். வனிதா கூறியதில் உண்மை இருக்கிறது.

காரணம், நட்பிற்கு இடம் பொருள் ஏவல் இருக்கக் கூடாது போன்ற ஞாயமான கருத்துக்களை முத்து கூறுகிறார் என்றால் கண்டிப்பாக அவர் அறிவாளியாகத்தான் இருக்க வேண்டும்.

Share