கொழும்பு ஹோட்டலில் துப்பாக்கி சூடு..!

விடுதி ஒன்றில் துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகி உள்ளது.இந்த சம்பவமானது கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொடயில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் காலா சந்தி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *