தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழில் தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனையடுத்து, ‘எங்கேயும் காதல்’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஹன்சிகா நடித்த ‘மஹா’ திரைப்படம் வெளியானது.
ஹன்சிகாவின் இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நிர்வகித்து வந்தார் சொஹைல் கதூரியா. வரும் டிசம்பர் 4ம் தேதி ஹன்சிகாவிற்கும், சொஹைல் கதூரியாவிற்கும் காதல் திருமணம் நடக்க உள்ளது.
இந்த திருமணம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. ஆடம்பர முறையில் அதிக பொருட்செலவில் இந்த திருமணம் நடைபெற போவதாகவும் சொல்லப்பட்டது.
மேலும், ஹன்சிகாவின் திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் வாங்கி இருப்பதாகவும், ரூ.16 கோடி கொடுத்து இந்த உரிமையை அந்நிறுவனம் வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தனது தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்துள்ளார் ஹன்சிகா. இதனையடுத்து, கிரீஸ் நாட்டில் இந்த பேச்சிலர் பார்ட்டியை தனது தோழிகளுடன் கொண்டாடி உள்ளார்.
இதுவரை இல்லாத வகையில் சிறப்பான முறையில் இந்த பேச்சிலர் பார்ட்டி நடந்திருப்பதாக ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
ஹன்சிகா சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில், பேச்சுலர் பார்ட்டியின் போது குடித்துவிட்டு தோழிகளுடன் ஆட்டம் போடும் வீடியோவையும், கையில் மதுவுடன் கிரீஸ் நகரின் வீதிகளில் வலம் வந்த வீடியோ மற்றும் அங்கு தனது தோழிகளுடன் மேட்சிங் மேட்சிங் உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது