தேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..!!

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க முடிவு செய்துள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 1 கிலோ இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை 60 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மாவின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை 60 ரூபாவினாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *