ஷூட்டிங்கில் வைத்து முத்தம் கொடுப்பேன் என கூறினார்..!! நடிகை நதியாவின் பகீர் தகவல்..!

எம் குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு தாய் கதாபாத்திரத்தில் நடித்து அதிக இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நதியா.ஆனால் தற்போதைய இளம் தலைமுறையினருக்கு நடிகை நதியாவை அம்மா ரோலில் நடிக்கும் நடிகையாக தான் தெரியும்.நதியா 80களில் இருந்தே சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.அத்தோடு பல 80′ 90’கிட்ஸ்களின் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை நதியா.

இது தற்போதைய இளம் ரசிகர்களுக்கு தெரியாது. நதியா குறிப்பாக தற்போது தெலுங்கு படங்களில், அம்மா ரோல்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அவர் மலையாள சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். பிரபல மலையாள நடிகர் முகேஷ் உடன் ஒரு படத்தில் நடித்த போது நதியாவை தினமும் ஜோக் சொல்லி சிரிக்க வைப்பாராம் அவர்.ஒரு முறை முகேஷ் அப்படி ஒரு ஜோக் சொன்னபோது அவரை நதியா ஜோக்கர் என சொல்லி பாராட்டினாராம்.இதை கேட்ட படக்குழுவினர் அதன் பின் முகேஷை ஜோக்கர் என சொல்லி பலரும் கலாய்த்து இருக்கின்றனர்.

நதியா இனிமேல் தன்னை ஜோக்கர் என சொன்னால் முத்தம் கொடுப்பேன் என அவர் மிரட்டினாராம். அதனால் அவரை எப்போது பார்த்தாலும் நதியா தனது உதட்டை கைகளால் மூடிக்கொண்டு செல்வாராம்.இந்த தகவலை தற்போது ஒரு நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போது அவர்கள் கூறி இருக்கின்றனர். இது தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக பேப்பட்டு வருகின்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *