மனைவியை கல்லால் தாக்கி கொன்ற கணவன்..!! வாக்கு மூலத்தால் அதிர்ச்சி..!

மனைவியின் தலையில் பெரிய கல் ஒன்றால் தாக்கி அவரைப் படுகொலை செய்த கணவன் ஒருவரை பதுளை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த இச்சம்பவமானது லுணுகலை – ஜனதாபுர, தம்பபிட்டிய வத்த கும்புக்கன் ஓயாவில் நடைபெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றையதினம், வத்த கும்புக்கன் ஓயாவிலிருந்து 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய், தலைப் பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இதையடுத்து 17 வயதுடைய மகள் தனது தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று பொலிஸாரிடம் கூறினார்.அதன்படி பொலிஸார் விசாரணையை தொடங்கிய போது சந்தேகத்தின் பேரில் 36 வயதான ஓட்டோ சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் தலைமறைவாகி இருந்த 45 வயதுடைய மேற்படி பெண்ணின் கணவர் நேற்றிரவு லுணுகலை நகரில் வைத்து லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில்,சிறிய கல் ஒன்றால் மனைவியின் தலைப் பகுதியைத் தான் தாக்கினார் எனவும், பின்னர் பெரிய கல் ஒன்றால் தாக்கிக் கொலை செய்தார் எனவும் சந்தேகநபர் தெரிவித்தார் என்று பொலிஸார் கூறினர்.

இருவருக்கும் இடையே மிக நீண்ட காலமாகக் குடும்பத் தகராறு காணப்பட்டது என்றும், இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகின்றது என்றும், பெண்ணின் வீட்டுப் பகுதிக்கு குறித்த நபர் செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் சந்தேக நபரை பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *