மனைவியை கொன்றுவிட்டு பொலிஸாரிடம் சரணடைந்த கணவன்..!!

பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிரியெல்ல பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்றய தினம் காலை நேரமே குறித்த பெண்ணின் கணவர் இந்தக் குற்றத்தை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணவன் மனைவி இருவரும் குடும்ப தகராறு காரணமாக தனித்தனி வீடுகளில் வசித்து வந்ததாக பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று காலை அவர் தனது பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுத்து வருவதற்காக தனது கணவர் வசிக்கும் வீட்டிற்கு சென்ற போதே படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.40 வயதுடைய நிரியல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.43 வயதான சந்தேக நபரின் கணவர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.அலபத்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *