ஈரான் ஜனாதிபதி மரணம் காரணமாக இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!

இலங்கையில் இன்றைய தினத்தை (21-05-2024) ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மறைவு காரணமாக துக்க தினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உட்பட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இலங்கை அரசாங்கம் துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

இதன்படி, அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *