மனைவியுடன் தகாத உறவு..!! கள்ள காதலன் கணவனுக்கு செய்த மோசமான செயல்..!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரங்கொடபாலுவ பிரதேசத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.42 வயதுடைய ராகம, நாரங்கொடபாலுவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

 

இவரது மனைவி நபரொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நிலையில், குறித்த நபர் இவரது வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து சந்தேக நபரும் உயிரிழந்தவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *