இலங்கையில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!! மக்களுக்கு எச்சரிக்கை..!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தகவலின்படி, இலங்கையில் 40,000 போலி வைத்தியர்கள் உள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.அதே நேரத்தில், அவர்களில் சிலர் பொதுமக்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்கின்றனர் என தெரிய வந்துள்ளது.

இவ்வாறான நிலையில், போலி வைத்தியர்கள் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் 1907 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சலின் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.அவர்களில் பெரும்பாலோர் மருத்துவத் துறையில் முன் அனுபவமோ திறமையோ இல்லாதவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *