30 May, 2023

பிக்பாஸ் அஜீம் ஒரு நார்சிசிஸ்ட், அப்படி என்றால் என்ன? இப்படியானவர்களை கண்டு பிடிப்பது எப்படி?

ஜய் டிவியின் பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் போட்டியாளரான சீரியல் நடிகர் அஜீமின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், அவரை நார்சிசிஸ்டு என்று கூறி அதற்கு விரிவான விளக்கத்தை அளித்திருக்கிறார் சமூக ஆர்வலர் கீர்த்தி.

நன்றாக பேசும் அஜீமால், தான் பேசுவதை செயல்பாட்டில் கொண்டு வர முடியவில்லை என்றும், தனது தவறை திருத்திக் கொள்ளாமல், செய்த தவறுக்கு நியாயம் கற்பிப்பதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார் எனவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே அஜீம் மற்றவர்களை விட தன்னை அதிகாரத்தோடு காட்டிக்கொள்வதும், தன்னை பற்றி தானே புகழ்ந்து பேசுவதும், மற்றவர்களை இழிவுபடுத்துவதையும் வேலையாக வைத்து இருக்கிறார்.

இவர் எப்படிப்பட்ட மனநிலை கொண்டவர் என்பதை புரியாமல் ரசிகர்களே குழம்பி வரும் நிலையில் அவரை நார்சிசிஸ்ட் மனம் கொண்டவர் என்று கூறி அதற்கு விரிவான விளக்கத்தை கொடுத்து உள்ளார் யுனைட்டேட் வே ஆஃப் சென்னை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூத்த மேலாளரான கீர்த்தி.

அவர் முகநூலில் பதிவிட்டுள்ளதாவது, “சரி ஒருவழியாக இந்த சீசன் பிக்பாசாவது பார்க்கலாம்னு பார்க்க ஆரம்பிச்சேன். தொடக்க நாள் அன்றே ஒரு செம்ம ஷாக். ஒருவரை பார்த்ததும் அவர் நார்சிசிஸ்டா இருப்பார் என்று தோன்றியது. எனக்கு தெரிந்து பிக்பாஸ் பார்ப்பவர்களிடம் எல்லாம் அதை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தேன்.

நார்சிசிஸ்ட் என்றால் என்ன என்று விளக்கமாக பிறகு சொல்கிறேன். ஆனால் அவர்களிடம் இருந்து ஒரு 10 கிமீ தள்ளி இருப்பது நம் மன நலத்துக்கு நல்லது என்று 2, 3 வருடம் பாடுபட்டு தெரிந்துகொண்டேன். இப்போது நாம் பிக்பாஸ் கதைக்கு வருவோம். அசீம் என்று ஒரு போட்டியாளர் இருக்கிறார் இல்லையா? அவர்தான் நம் ஆய்வுக்கானவர்.

அவர் நார்சிசிஸ்டாக இருப்பார் என்று மிக உறுதியாக என் நண்பர்களிடம் எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தேன். சொல்லப்போனால் அது எனக்கு நானே வைத்துக்கொண்ட ஒரு சோதனையும் கூட. வாழ்க்கையில் ஒரு சில மோசமான மனிதர்களை கடந்து வந்ததால் அனைவரையும் நம்ம சந்தேகப்படக்கூடாது இல்லையா?

அதற்காக எனக்கு தோன்றியது சரிதானா என்று நானே சோதனை செய்து பார்த்தேன். ஆனால் என் ஆய்வு வீன் போகவில்லை. இந்த நார்சிசிஸ்ட்களுக்கு எல்லாம் ஒரு முறை இருக்கும். சில முக்கியமான பன்புகளை மட்டும் இப்போது நான் சொல்கிறேன். தற்பெருமை அதிகம் இருக்கும். அவர்களை பற்றி மிக உயர்வாக அவர்களே நினைப்பார்கள். சுய தோற்றத்தின் மீது மிகவும் கவனமாக இருப்பார்கள். நான் செய்வது எல்லாமே சரி தான். நான் தவறே செய்ய மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

பேசும் கொள்கைகளுக்கும் செயலுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இருக்காது. பிறரை சிறுமைப்படுத்தி தன்னைத் தானே பெருமையாக பேசிக்கொள்வார்கள். இடத்திற்க்கு ஏற்ப ஒரு முகமூடி மாட்டிக்கொள்வார்கள். இப்போது நான் கூறியது எல்லாமே ஒரு உதாரணம் தான். இன்னும் நிறைய உள்ளது. பிக்பாஸ் ஆரம்பித்த 2 வாரத்திலேயே இவை அனைத்தையும் அசீம் காட்டிவிட்டார்.

குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை எபிசோட்தான் அசீம் உடைய நார்சிசிஸத்தின் அதிகபட்ச நிலை. அவருக்கு ஒரு விஷயம் வேண்டும் என்பதற்காகவே விக்ரமையும், ஆயிஷாவையும் தூண்டிவிட்டு பேசினார். அதில் ஆயிஷா மிகவும் கோபமடைந்து “போடி வாடி என்றெல்லாம் சொல்லாதீர்கள்.” என்று சொன்னதற்க்கு பிறகு மீண்டும் மீண்டும் போடி, யார்டீ நீன்னு கத்திட்டே இருந்தார்.

கோபத்தின் உச்சத்தில் ஆயிஷா செருப்பை கழட்டிய பிறகு, பாருங்க செருப்பை கழட்டி அநாகரீகமா நடந்துக்கொள்கிறார் என்று அவர்களையே தவறாக நினைக்க வைத்தார் அசீம். சில நேரத்துக்கு பிறகு ஆயிஷா நான் செருப்பை காட்டியது தப்புதான் என்று மன்னிப்பும் கேட்டு விட்டார். அங்கு சுற்றி இருந்த எல்லோருமே ஆயிஷாவை தடுக்க முயற்சி செய்தார்களே தவிர அசீம யாருமே தடுக்கவில்லை.

இந்த சமூகமும் நமக்கு அதைத்தான் சொல்லித் தருகிறது. இழிவுபடுத்துபவர் இழிவுபடுத்திக் கொண்டே இருப்பார். நீங்கள் கோபப்படக்கூடாது. ஆனால் ஆயிஷா மிகவும் அழகாக அதை கையாண்டார். விக்ரமன் இன்னும் அழகாக அசீமை கையாண்டார். ஆனால் எல்லாரலையும் விக்ரமன் மாதிரி பொறுமையாக இவர்களை போன்ற நார்சிசிஸ்டை கையாள முடியாது. தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தால் செருப்பை எடுத்து காட்டலாம். தவறே இல்லை.

இதில் இன்னும் பெரிய விசயம் என்வென்றால், கடைசியில் அசீம் சொல்கிறார், ஒரு பெண் செருப்பை எடுத்த காட்டுகிறார், அவளை எதுவும் சொல்லாமல் ஒரு ஆண் என்பதால்தானே என்னை ஜெயிலுக்கு அனுப்புகிறீர்கள். அதைவிட கேவலம் எதுவுமே இல்லை என்று பாதிக்கப்பட்டவர்போல் காட்டிக்கொண்டார். இதைதான் நார்சிசிஸ்டுகள் செய்வார்கள். தங்களை பாதிக்கப்பட்டவர்களாக காட்டிக்கொள்வார்கள்.

ஆயிஷா ஏன் செருப்பை எடுத்துக் காட்டினார் என்று யாரும் யோசிக்க வில்லை. அவரிடம் கேள்வியும் கேட்கவில்லை. அசீம் ஆயிஷாவை தூண்டிவிட்டதால் அவர் அதற்கு இணையான பதிலடியை கொடுத்தார். இந்த சம்பவத்துக்கு கடந்த சனிக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் என்ன சொல்லப் போகிறார் என்று நான் மிகவும் ஆவலாக இருந்தேன்.

“ஒரு புழுகூட குச்சி வெச்சு குத்துனீங்கனா எட்டப்பார்க்கும். ஆயிஷா செருப்பத் தூக்கிக் காட்டுனது அந்த பிரச்சனையோட ஆரம்பம்னா நான் ஆயிஷாவுக்கும் அறிவுரை சொல்லிருப்பேன். ஆன பிரச்சனையோட ஆரம்பம் அவங்க இல்ல.” என்று கமல் சொன்னார். அசீமிற்கு ரெட் கார் எல்லாம் குவிந்தது.

அதன் பிறகு யாருக்காவது ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்கிற வாய்ப்பை அவருக்கு கொடுத்தபோது, அவர் அந்த ரெட் கார்டை அவருக்கே வழங்கிக்கொள்வார் என்று நான் நினைத்து முடிப்பதற்குள் அதையும் செய்துவிட்டார். அப்போதுதான் புரிந்தது அவர் ஒரு அக்மார்க் நார்சிசிஸ்ட் என்று. அதன் பிறகு ஒரு உரை நிகழ்த்தினார் பாருங்க..! “ஆணும் பெண்ணும் சமம். யாரையும் தகாத வர்த்தைல பேசுறது தப்புதான்.” என்று. அதாவது அவர் திருந்திவிட்டார் என்று அவரே சொல்கிறாராம்.

கடந்த வாரம் வீட்டில் இருக்கும் அனைவரும் தனலட்சுமியை குற்றம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். “நீயெல்லாம் ஒரு பொண்ணா..! பழவாங்குவதற்காக விளையாடுறன்னு.” அந்த பெண்ணை ஒரு வழி செய்து விட்டார்கள்.. கடைசி வரைக்கும் தனலட்சுமியை யாருமே நம்புவதற்கு தயாராக இல்லை. ஒரே ஒரு குறும்படம் போட்டார் கமல்ஹாசன். யார் எல்லாரையும் கையாண்டு தனலட்சுமிய ஒதுக்கினார் என்பதை ஊரே பார்த்துவிட்டது.

இந்த வாரம் அவர் செய்ததன் பெயர் Tribe Gaslighting (உளவியல் ரீதியாக சுய அறிவை சந்தேகத்திற்குள்ளாக்குவது). குறும்படத்தை காட்டியதற்கு பிறகு நார்சிசிஸ்ட் அசீமின் முகம் மாறிவிட்டது. கமல்ஹாசன் ஒன்றை அழகாக சொன்னார். இப்போது குறும்படம் போட்டுக் காட்ட முடிந்ததால் யார் என்ன செய்தார்கள் என்று தெரிந்தது. ஆனால் வெளியில் நிஜ வாழ்க்கையில் குறும்படம் போட முடியாது. இது எவ்வளவு உண்மையான வார்த்தை. தப்பிப்பிழைத்த அனைவருக்கும் குறும்படம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

நார்சிசிஸம் என்பது நிரந்தரமானது. அவர்கள் மாறமாட்டார்கள். தாங்களே சரி என்று அவர்கள் எப்போதும் நினைப்பார்கள். இந்த சமூகம் நார்சிசிஸ்டுகளின் துன்புறுத்தல்களை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். முற்போக்கு பேசுவார்கள். ஆனால் “ஒரு ஆம்பள கிட்ட கைய நீட்டி பேசாத” என்று கேவலமான ஆதிக்கத்தை காட்டுவார்கள். இதை புரிய நான் உளவியலாளர் இல்லை என்று சிலர் கூறலாம். ஆனால், நான் நார்சிசிஸத்தில் இருந்து பிழைத்து வந்தவர்.” என்று குறிப்பிட்டு உள்ளார். இதை பார்த்த பலரும் எங்கள் மனதில் பட்டதை அப்படியே சொல்லி இருக்கிறார் என்று பாராட்டி வருகிறார்கள்.

Share