21 March, 2023

அவன் எங்க வைச்சு தள்ளினான் தெரியுமா? கதறியழும் தனலட்சுமி, ஜனனி

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பொம்மை டாஸ்க் நடைபெற்றது. இதில் அனைத்து போட்டியாளர்களும் பயங்கரமாக விளையாடினர்.

மேலும் பல சண்டைகளும் அரங்கேறியது. இந்த சண்டை வாய் வார்த்தையாக இல்லாமல் தள்ளுமுள்ளு வரை சென்றது.

நேற்றைய தினம் அசீமின் பொம்மை வெளியே தூக்கி எரிந்ததால், கடுப்பான அசீம் அவரை தள்ளிவிட்டு உள்ளே பொம்மையைக் கொண்டு சென்றார்.

இதில் அவன் எங்க கைவச்சு தள்ளினான் தெரியுமா? என்று தனலட்சுமி சக போட்டியாளரிடம் கதறி அழுதார். அசீம் முதலில் தள்ளும் போது இரண்டு தோள்பட்டையில் கையை வைத்து தான் தள்ளினார்.

பின்பு உள்ளே நுழைந்ததும் தனலட்சுமி தடுத்து நிறுத்தியதால், தகாத இடத்தில் தொட்டு தள்ளிவிட்டதாக தெரிகின்றது.

இந்நிலையில் இன்று ஜனனி கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார்.

அவர் இந்த வாரம் நடந்த டாஸ்கில் ஜெயிக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் அவருடன் எப்போதும் பேசும் போட்டியாளர்கள் கூட அவருக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.

இதை கமெராவிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் இங்கே தனியாக இருப்பது போல உணர்கிறேன். சில பேருக்கு என்னை பிடிக்கவில்லை.

எனக்கு கஷ்டமா இருக்கு” என ஜனனி அழுதிருக்கிறார். எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் ஜனனி இப்படி திடீரென அழுவதால் ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.

Share