ஆடைகள் அடங்கிய பொதிக்குள் மர்ம பொருளை வைத்து கடத்தல்..!! பெண் உட்பட மூவர் கைது..!

போதைப்பொருளை மிக சூட்சுமமாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதி ஒன்றினுள் வைத்து அனுப்பிய சம்பவம் தொடர்பில் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தனியார் நிறுவனமொன்றின் பார்சல் சேவையின் ஊடாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொழும்பில் இருந்து புடவை மற்றும் ஏனைய ஆடைகள் அடங்கிய பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பொதியினுள் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருளையும் மறைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பொதியினை பெற்றுக்கொண்டவர் மற்றும் அதற்கான பணத்தினை வழங்கிய பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் மீட்டு இருந்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொழும்பில் இருந்து பொதியை அனுப்பி வைத்த நபர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட மூவரும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைகளை தொடர்வதற்கான அனுமதி கிடைத்ததை அடுத்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *