போத்தல் துண்டு ஒன்றினால் கழுத்து அறுத்து கொலை..!! தகாத உறவால் ஏற்பட்ட பயங்கரம்..!

பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவமானது சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் நடை பெற்றுள்ளது. 26 வயதுடைய பலுகொல்லாகம, மெகொடவெவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.விசாரணையில், இறந்த பெண்ணுக்கும், தகாத உறவில் ஈடுபட்ட நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த நபர் பெண்ணின் கழுத்தை போத்தல் துண்டு ஒன்றினால் அறுத்து கொலை செய்துள்ளார்.சம்பவத்தின் பின்னர், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *