இத நிறுத்திட்டு.. எப்போ இத காட்டுவிங்க..? ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த மாளவிகாமோகனன்..!!

மாளவிகாமோகனன் 2013 இல் மலையாள படத்தில் நடித்து சினிமா துரைக்கு அறிமுகமானார்.இந்த வகையில் அவர் பட்டம்போல படத்தில் ரியா கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து ஏராளமான திரைப்பட வாய்ப்புக்களை பெற்றார்.இதனை அடுத்து 2015-ஆம் ஆண்டு நிர்நாயக்கம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த பேட்ட திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை மிகச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

இதனை அடுத்து 2021-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்த இவர் அடுத்த 2022-ஆம் ஆண்டு மாறன் படத்தில் தனுஷோடு ஜோடி போட்டோ நடித்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்.தற்போது தங்கலான் படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த மாளவிகா அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்தப்படம் அவருடைய நடிப்புத் திறமையை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் என நம்பும் அவருக்கு இந்தப் படம் வெற்றிப் படமாக அமையும் என்பது இனி வரும் காலங்களில் தான் தெரியவரும்.

இவ்வாறு இருக்க மாளவிகா மோகனன் தொடர்ந்து எல்லைமீறி கவர்ச்சி காட்டி தான் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அதை விமர்சித்து இருக்கும் நெட்டிசன் ஒருவர், ‘எப்போ கிளாமர் காட்டுறதை நிறுத்திட்டு, நடிக்க போறீங்க’ என கேட்டிருக்கிறார்.அதற்கு “எப்போவுமே இல்லை. அதில் என்ன உனக்கு பிரச்சனை” என மாளவிகா பதிலடி கொடுத்திருக்கிறார்.இந்த விடயம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *