24 September, 2023

கனடாவில் இருந்து வந்ததும் திருமணம்! கணவரை பிரிந்து மறுமணம் செய்ய முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவர் இரண்டாம் திருமணம் செய்ய நினைத்த நிலையில் நபர் ஒருவரால் மிகப்பெரிய அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளார்.

சென்னை முடிச்சூரை சேர்ந்த 35 வயதான பெண்ணுக்கு திருமணமான நிலையில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ஓன்லைனில் பதிவு செய்தார். அதை பார்த்த நபர் ஒருவர் அப்பெண்ணை தொடர்பு கொண்டு தன் பெயர் ஹபீப் ரகுமான் (38) எனவும் தனது முதல் மனைவி இறந்துவிட்டதால் மறுமணம் செய்ய பெண் பார்ப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து திருமணத்தை பற்றி பேச நேரில் வருமாறு அந்த பெண் கூறவே இவர் விலை உயர்ந்த சொகுசு காரில் சென்று பேசியுள்ளார்,அப்போது தனக்கு ஒரு அக்கா மற்றும் ஒரு அண்ணன் இருப்பதாகவும் அண்ணன் கனடாவிலும், அக்கா பூருனேவிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார். அழகான பேச்சு, அமைதியான குணம் நல்ல மனிதர் போல இருக்கின்றார் என அந்த பெண்ணும் நினைத்தார்.

 

மேலும் சகோதரர் மற்றும் சகோதரி வெளிநாட்டில் இருந்து விரைவில் வருவதாகவும் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என கூறியிருக்கிறார். பின்னர் மூன்று நாட்கள் கழித்து அந்த பெண்ணிடம் அவசரமாக 60 ஆயிரம் ரூபாய் வேண்டும் எனவும் இரண்டு நாட்களில் தந்து விடுவதாக கூறியதும் வாங்கியுள்ளார்.

பின்னர் ஐந்து நாட்கள் கழித்து தனக்கு அதிக நிலம் இருப்பதாகவும் அந்த இடம் குறித்து வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அந்த வழக்கை முடிக்க பத்து லட்சம் தேவைப்படுவதாகவும் நிலம் கைக்கு வந்தால் கோடி கணக்கில் விற்பனை செய்து நம் இருவரும் செட்டில் ஆகிவிடலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். வருங்கால கணவர் தானே என்று நினைத்து அந்த பெண்ணும் ரூ.10 லட்சத்தை ரகுமானிடம் கொடுத்துள்ளார்.

 

 

பின்னர் பழகிய 30 நாட்களில் சிறுக சிறுக 36,லட்சம் ரூபாய் மற்றும் 13,சவரன் தங்க நகையை வாங்கிக்கொண்டு ஹபீப் ரஹ்மான் சென்றுள்ளார். பின்னர் தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். மூன்று மாதமாக பல இடங்களில் ரகுமானை தேடி அவர் கிடைக்காததால் ஏமாந்த பெண் பொலிஸ் புகார் அளித்துள்ளார். புகாரையடுத்து பொலிசார் தனிப்படை அமைத்து ஹபீப் ரஹ்மானை கைது செய்தனர்.

விசாரணையில் அவருக்கு ஏற்கனவே மூன்று திருமணம் ஆகி மனைவிகளுடன் வசித்து வருவதாகவும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் கணவன் இழந்தவர்கள் அவர்களை வெப் சைட் மூலமாக தேடிக்கண்டுபிடித்து ஏமாற்றி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. பொலிசார் தொடர்ந்து ரகுமானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share