கைத் தொலைபேசியால் அரங்கேறிய கொலை சம்பவம்..!! மேலதிக விசாரணையில் பொலிஸார்..!

வாழைச்சேனை பகுதியில் மொபைல் சண்டையால் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது நேற்று (19) இரவு நடைபெற்றுள்ளது.43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *