21 March, 2023

சர்ச்சைக்கு அதிரடி முற்றுப்புள்ளி, ஆதாரங்களை சமர்ப்பித்து நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

வாடகை தாய் விவகார சர்ச்சைக்கு ஆதாரங்களை விசாரணை குழுவிடம் கொடுத்து விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருமணம் ஆன 4 மாதத்திலேயே இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டுள்ளதால், தடையை மீறி செயல்பட்டதாக பல தகவல்கள் பரவியது.

இது குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் விசாரணை குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

ஒருவேளை இவர்கள், தடையை மீறி செயல்பட்டிருந்தால் சிறை செல்லவும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

குழுவிடம் ஆதாரங்களை சமர்ப்பித்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா
இவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் விசாரணை செய்யப்பட்டதை தொடர்ந்து, நயன்தாரா – விக்னேஷ் சிவனிடமும் விசாரணை நடந்துள்ளது.

அப்போது இவர்கள் விசாரணை குழுவிடம் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கடந்த டிசம்பர் மாதமே வாடகை தாய்முறையில் குழந்தை பெறும் முறை ஒப்பந்த பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கூறி வாடகை தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்பது குறிபிடித்தக்கது.

Share