கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா- விக்னேஷ் சிவன் தங்களது குழந்தைகளுக்காக வருடா வருடம் பின்பற்றும் வழக்கத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என பேசப்படுகிறது.
சர்ச்சைகள் பல இருந்தாலும் சாதனை கற்களாக மாற்றி தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா வரை நயன்தாராவின் புகழ் நீடிக்கிறது.
கடந்த 7 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வந்த நிலையில், சினிமா நட்சத்திரங்கள், நண்பர்கள், சொந்த பந்தங்கள் முன்னிலையில் கோலாகலமாக ஜீன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் 4 மாதத்திலேயே இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக அறிவித்தனர் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியினர்.
இந்நிலையில் தங்களது குழந்தைகளுக்காக வருடா வருடம் பின்பற்றும் வழக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளாராம் நயன்தாரா.
ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வெளிநாடு சென்று கொண்டாடும் இந்த தம்பதியினர், இந்த ஆண்டு வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார்களாம்.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் நயன்தாராவுக்கு சர்ப்ரைஸ் அளிக்க முடிவு செய்திருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.