நயன்தாராவின் இரட்டைக் குழந்தை விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், எதையும் கண்டுகொள்ளாமல் சென்னையிலிருந்து நயன்தாரா கிளம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன் விக்கி ஜோடி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்று அவர்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தனர்.
இரட்டைக் குழந்தைகள்
திருமணமாகி நான்கு மாதங்களே ஆனநிலையில் சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தானும், நயன்தாராவும் அப்பா, அம்மா ஆகிவிட்டதாகவும், தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வாடகை தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பல விவாதங்கள் கிளம்பி வருகிறது.
நயன்தாரா விக்னேஷ் இருவர் மீதும் தொடர் விசாரணையும் நடைபெற்று வரும் நிலையில், தம்பதிகள் இருவரும் இன்னும் இதுகுறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சென்னையிலிருந்து கிளம்பும் நயன்தாரா
இதையடுத்து அரசு சார்பில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவரது விஷயத்தில் பரபரப்பு நிலவி வரும் நிலையில் நயன்தாரா சென்னையில் இருந்து கிளம்புவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா தற்போது ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிப்பதுடன், படத்தையும் தயாரித்து வருகிறார். இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் நயன்தாரா நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் சூட் செய்யப்பட உள்ளதாம். இதற்காக 20 நாட்கள் ராஜஸ்தான் புறப்படுகிறார் நயன்தாரா.
வாடகை தாய் பிரச்சனை தீப்பற்றி எரியும் நேரத்தில் நயன்தாரா இங்கிருந்து கிளம்புவது கேள்வியை எழுப்பியுள்ளது.