கடந்த 2015ம் ஆண்டு ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாரா நடித்த போது, இயக்குனர் விக்னேஷ் இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் திடீரென தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்தார்.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பின்பு தம்பதியினர் முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலைியல் விக்னேஷ் சிவனின் தாய் நயன்தாராவின் வீடு குறித்து சில தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
நயன்தாராவின் மாமியார் கூறுகையில், நயன்தாரா வீட்டில் எட்டு வேலைக்காரர்கள் இருக்கின்றனர். நான்கு ஆண், நான்கு பெண்…. அயன் பண்ணுதல், சமைத்தல், பாத்திரம் கழுவுதல் என அனைத்திற்கும் தனித்தனிாக ஆள் வைத்துள்ளாராம்.
ஒருமுறை வேலை செய்யும் பெண் ஒருவர் சோகமாக இருந்த நிலையில், அவரிடம் நயன்தாரா விசாரித்தாராம்… 4 லட்சம் கடனாக இருப்பதாகவும், கடும் சிரமமாக இருப்பதாகவும் கூறினாராம்.
உடனே சற்றும் யோசிக்காத நயன்தாரா, அவருக்கு 4 லட்சத்தினை உடனே கொடுத்துள்ளாராம்… பின்பு ஒரு நாள் நயன்தாரா தாய் வீட்டிற்கு வரும்போது, அவர் தனது கையில் இருந்த தங்க வளையல் இரண்டை கழற்றி அந்த வேலைக்கார பெண்ணிற்கு போட்டுவிட்டாராம்.
வீட்டை சுற்றி கமெரா இருந்தாலும் நயன்தாராவிடம் கேட்காமல் ஒரு பொருள் எடுக்கவும் மாட்டார்களாம்… சாப்பிடவும் மாட்டார்களாம்… அனைத்து வேலைகாரங்களும் மிகவும் நம்பிக்கை ஆனவர்கள் என்று கூறியுள்ளார்.