பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்க பொலிஸ் நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை இல்லை..!! அறிமுகப்படுத்தியுள்ள‌ புதிய வசதி..!

பொதுமக்கள் முறைப்பாடுகளை ஒன்லைன் மூலம் பதிவு செய்யும் போது முறைப்பாட்டாளரின் வீட்டிற்கு உடனடியாக பொலிஸ் குழுக்கள் அனுப்பி முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் புதிய முறைமையை அறிமுகப்படுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.குறித்த நடவடிக்கை வார நாட்களில் அமுல்படுத்தப்படும் எனவும், இனிமேல் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்யத் தேவையில்லை எனவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளை TELL IGP என்ற பொலிஸ் இணையதளம் ஊடாக வழங்கினால் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் கொழும்பு மாவட்டத்தில் இந்த நடவடிக்கை முதலில் ஆரம்பிக்கப்படுள்ளதுடன், 22 பொலிஸ் நிலையங்களிலும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *