ஆலயத்தில் பூஜையின் போது சரிந்து விழுந்த பெருமாள்..!! அதிர்ச்சியில் பக்தர்கள்..!

கோவிலில் கருட சேவை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பெருமாள் திடிரென சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் வரதராஜ பெருமாள் கோயிலில் இடம் பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரிய வருகையில்.

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா இன்று இடம்பெற்றது.இதன் போது கருட சேவை நிகழ்ச்சியின் போது தண்டு உடைந்து பெருமாள் திடீரென விழுந்ததில் அர்ச்சகர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கல்யாண வரதராஜ பெருமாள் சன்னதியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கருட சேவை உற்சவத்தில் ஏற்பட்ட இச்சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *