முன்னாள் ஜனாதிபதி வீட்டிற்கு முன்னால் குவிக்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு படை..!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு 07 இல் அமைந்துள்ள அவரது வீட்டிற்று முன்னால் பொலிஸார்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை செயல்பட்டவரை தமக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார்.

இதனையடுத்து அவர் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார்.இந்நிலையில் மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் என்ற அமைப்பினர் மைத்திரிபாலவை நேரில் சந்தித்து அவரிடம் யார் அந்த சூத்திரதாரி என்ற கேள்வியை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவரது வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பொலிஸாரின் வீதித்தடைக்கு முன்னால் மறிக்கப்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸாரிடமும் ஊடகங்களிடமும் கருத்துக்களை முன்வைத்ததையடுத்து பின் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த விவகாரத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் அமைப்பினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *