பிரதமர் முக்கிய அறிவிப்பு..!! இரண்டுமாதங்களில் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை..!

இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் மின்சார கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.கொழும்பில் அனைத்து பிரதேச செயலகங்களின் மூலம் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், பௌத்த அமைப்புகள் மற்றும் வர்த்தகர்களை ஒருங்கிணைத்து வெசாக் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு வெசாக் வலயங்களை ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (17) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொலன்னாவை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர்,மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். இதுபற்றி அரசாங்கத்திற்குள் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்த மின்கட்டணக் குறைப்பை அடுத்த 2 மாதங்களில் நடைமுறைக்கு கொண்டு வரமுடியும். உமா ஓயா மின் உற்பத்தி நிலையம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும்.இப்போது இலங்கையின் மின்சார கட்டமைப்புக்கு உமா ஓயாவிலிருந்து 120 மெகாவாட் மின்சாரம் கிடைக்கப்பெறுகிறது என தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *