21 March, 2023

ராஷ்மிகா கையில் போட்டிருக்கும் டட்டூவின் அர்த்தம் தெரியுமா? வியந்து போன ரசிகர்கள்

தென்னிந்திய நடிகை மட்டுமல்லாமல் ஒரு பேன் இந்திய நடிகை என்று சொல்லக்கூடிய அளவில் தன்னுடைய அற்புதமான நடிப்பு திறமையால் எந்த அளவு உயர்ந்து இருக்கக்கூடிய நடிகை தான் ராஷ்மிகா மந்தானா இவர் தனது நடிப்பின் மூலம் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்த்திருக்கிறார் என்று கூறலாம்.

மேலும் அண்மையில் இவர் நடித்த படமான புஷ்பாவில் ஸ்ரீ வள்ளியாக நடித்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டார். இது மட்டுமல்லாமல் ஸ்ரீ வள்ளியின் பாடல் எங்கும் எப்போதும் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கக்கூடிய வகையில் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் எந்த ஸ்ரீவள்ளி பாடலுக்கு கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான விராட் கோலி முதல் ஹர்திக் பாண்டியா வரை அனைவரும் நடனமாடி அசத்தியிருந்தார்கள்.

மேலும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் கிட்டை கொடுத்தது. இதனை அடுத்து ராஷ்மிகா மந்தானா. ராஷ்மிகா என்றாலே அனைவரும் ஒரு கிரேஸ் ஆகி விடுவார்கள்.

சமூக ஊடகங்களிலும் இவர் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவ்வப்போது ரசிகர்களோடு தொடர்பு கொள்கிறார். இது மட்டுமல்லாமல் ரசிகர்கள் விரும்பத்தக்க வகையில் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்து அதில் பதிவிடுவார்.

இப்போது ராஷ்மிகா மந்தானாவின் டேட்டூ நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அப்படி இந்த டேட்டுவை எதற்காக அவர் போட்டார் என்று ரசிகர்கள் அறிய விரும்பியதின் பலன் தற்போது கிடைத்துள்ளது.

இதற்கான பதிலை ராஷ்மிகா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதில் ரசிகர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவற்றை மிகத் தெளிவாக வலைதளப் பகுதியில் காட்டி இருக்கிறார்.

இதில் நான் ஈடு செய்ய முடியாதவள் நீங்கள் ஈடு செய்ய முடிந்தவர்கள் என்று எழுதி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ந்து விட்டார்கள். இதுதான் இந்த பச்சை குத்தலின் அர்த்தமாம்.

ராஷ்மிகாவின் வலது மணிக்கட்டுக்கு அருகில் இந்த பச்சை குத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இதற்கான அர்த்தத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Share