
rasi palan today
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே!
தந்தைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசி யம். வியாபாரத்தில் பிற்பகலுக்குமேல் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். முருகப் பெருமானை வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

rasi palan today
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே!
அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அருகில் இருக்கும் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண்விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். சிவ வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

rasi palan today
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே!
உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் குறைவாகவே கிடைக்கும். சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சங்கடங்கள் ஏற்படும்.

rasi palan today
கடகம்
கடக ராசி அன்பர்களே!
அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்க வும்.வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண் டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். மனதில் மிகுந்த தன்னம் பிக்கையு டன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. விநாயகர் வழிபாடு காரியங்களில் வெற்றி தரும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நன்று.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

rasi palan today
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே!
பொறுமையுடன் சிந்தித்துச் செயல்பட வேண் டிய நாள். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் தரும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

rasi palan today
கன்னி
கன்னி ராசி அன்பர்களே!
எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சி களுக்கு உதவியாக இருப்பார்கள். அம்பிகை வழிபாடு மனநிம்மதி தரும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

rasi palan today
துலாம்
துலா ராசி அன்பர்களே!
உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவை களை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது ஆறுதலாக இருக்கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண் டாகும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

rasi palan today
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே!
அனுகூலமான நாள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும். சிலருக்கு எதிர் பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபா ரத்தில் வாடிக்கையாளர்கள் வகையில் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. இன்று ஆறுமுகப் பெருமானை வழிபடுவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறலாம்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் வீண் செலவுகள் ஏற்படும்.

rasi palan today
தனுசு
தனுசு ராசி அன்பர்களே!
சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். இன்று மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கக்கூடும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

rasi palan today
மகரம்
மகர ராசி அன்பர்களே!
எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். சகோதரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் விருப்பம் நிறைவேறும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும்.
.

rasi palan today
கும்பம்
கும்பராசி அன்பர்களே!
மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். அன்றாடப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப் பது நல்லது. வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. பைரவரை வழிபடுவதன் மூலம் மனக்குழப்பங்கள் விலகும்
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

rasi palan today
மீனம்
மீன ராசி அன்பர்களே!
வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். விநாயகரை வழிபடுவதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஆதாயம் கிடைக்கும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்