21 March, 2023

லவ்டுடே பிரதீப் மீது மோசமாக விமர்சித்து குற்றசாட்டு முன் வைத்த பிரபல நடிகை

லவ் டுடே “கோமாளி” படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான “லவ் டுடே” படத்தில் இயக்கி நடித்திருப்பார் பிரதீப் ரங்கநாதன். இன்றைய இளைஞர்களுக்கு அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்து படம் அமைந்திருந்தனால் பாக்ஸ் ஆஃபிஸில் 70 கோடிக்கு மேல் வசூலித்தது.

பிரதீப் இயக்கிய முதல் படத்திலேயே ரஜினிகாந்தை ட்ரோல் செய்வது போல் காட்சி அமைந்திருந்ததனால் கடுமையாக விமர்சிக்கபட்டார்.

பிரதீப் ரங்கநாதனின் பழைய பேஸ் புக் போஸ்ட்களில் தோணி, சச்சின், யுவன் போன்ற நட்சத்திரங்களை மோசமாக பேசிருந்ததனால் நெட்டிசென்கள் அவரை வெளுத்து வாங்கினர். விமர்சனங்களுக்கு பதில் அளித்த பிரதீப், தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

யூடியூப் பிரபலமான ஆர்.ஜே ஆனந்தி, ஒரு சேனலில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், லவ் டுடே படத்தில் அதிகமாக ஆண்களை நல்லவர்களாகவும் பெண்கள் மோசமானவர்கள் போல காமெடி காட்சிகள் அமைந்திருக்கிறது.

படத்தில் கதாநாயகியின் தங்கைக்கு தவறான மெசேஜ் அனுப்பவில்லை என நிரூபித்த ஹீரோ பிரதீப் உத்தமன் நல்லவன். ஆனால், படத்தில் பிரபல நடிகையை பதம் பாக்கணும் என்று சொல்லும் போது இது காமெடி என எப்படி ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.பெண்களை இன்னும் சினிமா துறையில் தவறாக சித்தரிப்பததை எவ்ளோ நாள் தான் பொறுத்துக் கொள்ள முடியும்” என மோசமாக விமர்சித்துள்ளார் ஆர்.ஜே ஆனந்தி.