பள்ளிவாசல்களுக்கு ரமழான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு..!!

ரமழான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களை பாதுகாக்க ராணுவத்தை ஈடுபடுத்த சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பணிப்புரையின் பிரகாரம் விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் பாதுகாப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் மௌலவிகளையும் சந்தித்து சிறப்பு பாதுகாப்பு அமைப்பு குறித்து தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள 3,203 பள்ளிவாசல்களில் மத வழிபாடுகள் நடைபெறும் 2,453 பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.அந்த பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காக 5,580 பொலிஸ் அதிகாரிகள், 510 சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் 1,260 இராணுவத்தினர் உட்பட 7,350 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *