30 May, 2023

அந்த அளவுக்கு பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை… பிரபல இயக்குநரை அசிங்கப்படுத்திய டாப்ஸி! – Taapsee

நடிகை டாப்ஸியிடம் கேட்ட கேள்விற்கு தனக்கு அந்த அளவிற்கு பாலியல் வாழ்க்கையில் அனுபவம் இல்லை என கூறியுள்ளார்.

நடிகை டாப்ஸி
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். டாப்ஸி தற்போது Dobaaraa என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

அந்த அளவுக்கு பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை… பிரபல இயக்குநரை அசிங்கப்படுத்திய டாப்ஸி! | Taapsee Hasn T Been On Chat Show Koffee With Karan

பஞ்சாப்பை சேர்ந்த டாப்ஸி தெலுங்கு மொழியில் 2010ஆம் ஆண்டு வெளியான ஜுமாண்டி நாடம் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை டாப்ஸி. தமிழில் வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை,கேம் ஒவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக டாப்ஸி விஜய் சேதுபதியுடன் அனபெல் சேதுபதி என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக இருந்த டாப்ஸி, சாஷ்டே பதூர் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி பல படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார். மற்ற மொழிகளை காட்டிலும் பாலிவுட்டில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த மிஷன் மங்கள்,சாந்த் கி ஆன்க், தப்பத், ஹசீன் தில்ருபா, போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றன.

தற்போது டாப்சி இந்தியில் Dobaaraa பெயரில் வெளியாக உள்ள படத்தில் நடித்துள்ளார்.த்ரில்லர் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்துக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாப்ஸியிடம், பட ப்ரோமோஷன் என்றாலே காபி வித் கரண் நிகழ்ச்சி தான்.

நீங்கள் ஏன், அதில் கலந்து கொள்ளவில்லை என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த டாப்ஸி, காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு பாலியல் வாழ்க்கையில் அத்தனை அனுபவம் இல்லை என்று கரண் ஜோகரை அசிங்கப்படுத்தும் அளவுக்கு நக்கலாக பதிலளித்துள்ளார்.

Share