இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தரகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்..!!

இன்று (13-02-2024) முதல் நாட்டிலுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு முதல் உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, முதற்கட்டமாக அடுத்த ஆறு மாதங்களுக்கான கொடுப்பனவு பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ளதுடன், அடுத்த கட்டமாக நிலுவைத் தொகையுடன் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்தார். மேலும், பொலிஸாருக்கு வழங்கப்படும் உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவு 18,930 ரூபாய் முதல் 25,140 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலவும் வறண்ட காலநிலையால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்..!!மக்களுக்கு எச்சரிக்கை..

சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தோல் நோய்கள் நாடு முழுவதும் பரவி வருவதாகவும், இதனால் சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் பகல் நேரத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற இடம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.போதுமான தண்ணீர் மற்றும் திரவங்களை குடிக்க அனுமதிக்காவிட்டால் குழந்தைகள் வெப்ப அதிர்ச்சிக்கு ஆளாகி இறக்க நேரிடும் என்றும் வைத்தியர் கூறியுள்ளார். நீர்ச்சத்து குறைபாடு, சோர்வு, தலைவலி, வாந்தி, தூக்கம், பசியின்மை, போன்ற காரணங்களால் […]

ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு வழங்கினால் கடும் நடவடிக்கை..!!

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு வாங்குவதற்காக பணம் வசூலிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதை தடை செய்து சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேவேளை ஆசிரியர்கள் இவ்வாறு பரிசுகளை பெறுவதும் தவறு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல கோடி மதிப்புடைய மாணிக்கக்கற்களுடன் கைதாகிய தேரர்..!!

37 கோடி ரூபா மதிப்புகொண்ட‌ மாணிக்கக்கற்கள் கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைப்பற்றபட்டுள்ளன.குறித்த சுற்றிவளைப்பு இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இடம் பெற்றுள்ளது.இரண்டு நீல மாணிக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவை சட்டவிரோதமாக விற்கப்பட இருந்ததாக தெரியவருகிறது. அதன் மதிப்பு 37 கோடி ரூபா என இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் வெலிவேரி பிரதேசத்தின் தேரர் ஒருவர் உட்பட இருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

மீண்டும் இலங்கையில் பயன்பாட்டிற்கு வரவுள்ள Door To Door விநியோக முறை..!!

வெளிநாட்டில் வசிப்பவர்கள் இலங்கையில் உள்ள தங்கள் வீடுகளுக்கு பொருட்களை அனுப்ப பயன்படுத்தப்படும் Door to Door விநியோகிக்கும் முறை சுங்கத்துறையால் இடைநிறுத்திவைக்கப்பட்ட‌ நிலையில் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த,Door to Door விநியோக முறையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் இறக்குமதி […]

நாட்டில் புதிதாக மின் இணைப்பு பெறுபவர்களுக்கு கிடைக்கவிருக்கும் சலுகை சலுகை..!!

நாட்டில் புதிய மின் இணைப்புகளுக்கு ஒரே நேரத்தில் பணம் செலுத்த முடியாத விண்ணப்பதாரர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் வாய்ப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சார சபைக்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார். மின்சார சபையின் ஏனைய சேவைகளுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தி தருமாறும், அதற்கான வசதிகளை உடனடியாக அறிவிக்குமாறும் அமைச்சர் அறிவித்துள்ளார்.அதற்கமைய, மின்சார சபை விரைவில் வசதிகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்த ஆண்டு மின் உற்பத்தி திட்டம், அமைப்பு, […]

இலங்கையில் புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!!

இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை விநியோகம் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.இந்த நோக்கத்திற்காக, முக அடையாளம் மற்றும் கைரேகை தரவு சேகரிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.இந்த திட்டம் இந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்த அவர்,குருநாகல் மற்றும் கண்டி மாவட்ட அலுவலகங்களில் முதற்கட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமேல் மற்றும் மத்திய மாகாண அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால், தேசிய அடையாள […]

2024ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை கல்வி குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு.!!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி 2024ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, 2023ஆம் கல்வியாண்டுக்கான 3 ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவுறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியா வீட்டுப்பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு கட்டணம் தொடர்பில் புதிய தீர்மானம்.!!

இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான கட்டணத்தை குறைக்க சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது.பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகாண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சினால் இந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இலங்கையில் இருந்து ஒரு வீட்டுப் பணியாளரை வேலைக்கு அமர்த்துவதற்கான கட்டணத்தை 15,000 சவூதி அரேபிய ரியால்களில் இருந்து 13,000 சவூதி […]

பதிவுசெய்து வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு கிடைக்கும் பிரதிபலன்கள்..!

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ள சுமார் 3 மில்லியன் இலங்கையர்களில் 1.2 வீதமானவர்கள் மாத்திரமே வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக வெளிநாடு செல்பவர்கள் வெளிநாடுகளில் தொழில் செய்யும் போது பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கண்டியில் மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கருத்துத் […]