24 September, 2023

பிறக்கும்போதே சிறுநீர்ப்பை இல்லாமல் பிறந்து 19 வயதுவரை சாதிக்கும் குட்டை பாடகி..!

tamil cinema : நாக்பூரைச் சேர்ந்த 19 வயது பெண் அரிய வகை நிலையால் குழந்தை என்று பலரால் தவறாக நினைக்கப்படுகிறாள். இந்நோய் வெறும் 3 அடி 4 அங்குல உயரம் கொண்ட அபோலி ஜரிட்டின் வளர்ச்சியை முற்றிலும் தடை செய்துள்ளது.

அபோலி குழந்தையாக இருந்தபோது அவருக்கு சிறுநீரக ரிக்கெட்ஸ் என்ற கோளாறு இருந்தது கண்டறியப்பட்டது. இந்த சிறுநீரக நோய் மற்றும் எலும்புகளின் சிதைவை இணைக்கும் நோய்க்குறி, அபோலியின் அன்றாட வாழ்க்கையை பல்வேறு கோணங்களில் பாதித்துள்ளது.

tamil cinema

tamil cinema

மேலும், அபோலி சிறுநீர்ப்பை இல்லாமல் பிறந்ததால் அவர் எப்போதும் டயப்பரை அணிய வேண்டிய சூழலே உள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், “நான் சிறுநீர்ப்பையுடன் பிறக்கவில்லை, அதனால் சிறுநீர் எப்பொழுதும் என் இடுப்பு வழியாக வெளியேறிகொண்டே இருக்கும் ” என்றார்.

நோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, மருத்துவர்கள் அபோலியின் இடுப்பில் ஒரு துளை செய்து, சிறுநீர் உடலில் சேராமல் பார்த்துக் கொண்டனர். மேலும், வளர்ச்சி குன்றியதால் நடக்க இயலாமல் அபோலி சக்கர நாற்காலியில் அமர்ந்து விட்டார்.

தனது தினசரி போராட்டங்களுக்கும் மேல், ஆன்லைனில் தனது குட்டையான உருவத்தை கேலி செய்யும் ட்ரோல்களால் தான் அடிக்கடி குறிவைக்கப்படுவதாக அபோலி கூறினார். ஆனால் இந்த துயரங்கள் அபோலியை பெரிய கனவுகளில் இருந்து தடுக்கவில்லை.

tamil cinema

tamil cinema

ஆர்வமுள்ள மாடல் மற்றும் பாடகியாக வலம் வரும் அபோலி வாழ்வில் தனக்கான இலக்கை உயர்வாக அமைத்துள்ளார். அபோலிக்கு சிறுவயதில் இருந்தே பாட்டு பாடுவதிலும் நடனம் ஆடுவதிலும் மிகுந்த ஆர்வம் இருந்து வந்துள்ளது.

ஆனால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அரிய வகை பாதிப்பால் நடக்கக்கூட முடியாமல் போய்விட்டது. ஒருமுறை அபோலிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருகிறது ஆனால் அது அவரை தனது லட்சியத்தில் இருந்து தடுக்கவில்லை, உட்கார்ந்து கொண்டே நடனமாடினார் அபோலி.

பின்னர், அவரது சகோதரர் ஒரு போட்டிக்கு அபோலியின் பெயரைக் கொடுத்துள்ளார். இது அபோலிக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. அவர் இந்தியன் ஐடல் என்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிஸஸ் வீல்சேர் இந்தியாவின் இறுதிப் போட்டியையும் எட்டினார்.

அபோலிக்கு பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் பணியாற்றி ஒரு பிரபல நடிகராக மாற வேண்டும் என்று விரும்புகிறார். அவரது உடல்நிலையை குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தாலும், அபோலி தனது எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார்.