29 May, 2023

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை…. யார் இந்த இளம் பெண்?

tamil cinema : அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை அகிலா நாராயணன் பெற்றுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’காதம்பரி’ என்ற திரைப்படத்தில் இவர் நடிகையாக அறிமுகமானார்.

அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர் கலை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

நடிப்போடு பிரபல பாடகியாகவும் வலம் வந்த அகிலா நாராயணன், கலைத்துறையோடு தனது சாதனை பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல், ராணுவத்தில் இணைய வேண்டும் என்று முடிவு செய்தார்.

மிக கடினமான பயிற்சிகளை கொண்ட அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெறுவது என்பது மிக சவாலானது என்றாலும், கடுமையான பல மாத பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்று அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கும் அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தின் பலவிதமான கடின பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து வீரமும், விவேகமும், பலமும் கொண்ட பெண்மணியாக தன்னை நிரூபித்துள்ளார்.

இந்த தகவல் வெளியானதில் இருந்து  இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

 

Share