tamil cinema : ‘நந்தா’, ‘பிதாமகன்’, உள்ளிட்ட பல முக்கிய படங்களை இயக்கியவர் பிரபல இயக்குநர் பாலா. இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பங்கு இயக்குநர் பாலாவிற்கு உண்டு.
இதனிடையே பாலா தனது மனைவி முத்துமலரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியாக்கியது.
அந்த வகையில் தற்போது பாலா குறித்து ஒருவிஷயம் வெளியாகிஉள்ளது.ராமேஸ்வரத்தில் இருக்கும் பிச்சைக்காரர் ஒருவருடன் பாலா நட்புடன் பழகி வந்துள்ளார்.
அந்த பிச்சைக்காரரை பாலாவிற்கு மிகவும் பிடித்து போக, பிச்சைக்காரருக்கு பட்டு வேட்டி, சட்டை கொடுத்து அவரை ராமேஸ்வரம் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பரிவட்டம் கட்டுமாறு குருக்களிடம் கூறியிருக்கிறார்.
அந்த பிச்சைக்காரருடன் பாலா அதிக நேரம் செலவிட்டது வந்தது முத்து மலருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதனால், இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, மது, போதை என்று வீட்டிற்கு வராமல் அலுவலகத்திலேயே கிடந்துள்ளாராம் பாலா. இப்படியே பிரச்சனை பெரிதாகி, பெரிதாகி இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.