21 March, 2023

கண்ண மூட சொல்லிட்டு தாமரைக்கு பாலா செய்தத பாருங்க..!

tamil cinema : நேற்றைய தினத்தில் சிம்பு பயங்கர ஜாலியாக நிகழ்ச்சியினைக் கொண்டு சென்றார். அதிலும் கடந்த வாரத்தில் உள்ளே விருந்தினராக வந்த சாண்டி மற்றும் தீனா இருவரும் வேற லெவலில் நிகழ்ச்சியினைக் கொண்டு சென்றனர்.

சிம்பு பாலா தாமரை இருவரும் வெற்றி பெறுவார்கள் என்று சூசகமாக கூறினார். மேலும் பாலாவிற்காக தாமரை விளையாடாமல் வெளியே வாக்கு அளிக்கும் தம்பிகளுக்காகவும் விளையாட தாமரையிடம் சிம்பு கூறினார்.

இந்நிலையில் பாலா தாமரை இவர்களின் பாசம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வரும் நிலையில், தற்போது மற்றொரு காட்சி வைரலாகி வருகின்றது.

ஆம் பாலா தான் முதன்முதலாக சம்பாதித்து கிடைத்த பணத்தில் வாங்கிய செயினை தாமரையின் கழுத்தில் பரிசாக போட்டுள்ளார். இதனால் தாமரையின் கண்ணை மூடி சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.

பாலா அளித்த பரிசினை பார்த்து தாமரை கண்கலங்க மிகவும் வருந்தினார். பின்பு பாலாவின் கழுத்திலேயே அதனை போட்டுவிட்டு வீட்டுக்கு செல்லும் போது வாங்கிக்கொள்வதாக கூறினார் தாமரை.

Share