24 September, 2023

KPY பாலாவுக்கு பிடித்த நடிகை தெரியுமா..? திருமணம் ஆகிவிட்டால், மாறுவேன்..

tamil cinema:விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யார்? நிகழ்ச்சியின் மூலமாக தனது நகைச்சுவை பாணியால் தமிழக மக்களிடையே நன்கு பரிட்சயமானவர் பாலா. அதனைத்தொடர்ந்து, அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

தற்போது, பல்வேறு விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் பாலா, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து இருந்தார். அந்த பேட்டியில், அவருக்கு பிடித்த நடிகை தொடர்பான கேள்விகள் நெறியாளர் குரேஷியால் கேட்கப்பட்டது.

அப்போது பதிலளித்த பாலா, எனக்கு நடிகை பூனம் பாஜ்வாவை தான் பிடிக்கும். அப்போதும் சரி, இப்போதும் சரி அவரை தான் எனக்கு பிடிக்கும். ஒருவேளை அவருக்கு திருமணம் ஆகிவிட்டால், வேறொரு நடிகைப்பக்கம் மாறுவேன் என்று தனது நகைச்சுவை பாணியில் கலகலப்புடன் பேட்டியளித்து இருந்தார்.

tamil cinema

tamil cinema

 

Share