tamil cinema : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய கமல் வெளியேறிய நிலையில், தற்போது சிம்பு தொகுத்து வழங்க இருக்கின்றார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, இதுவரை நடைபெற்ற சீசன்களில் இருந்து சில போட்டியாளர்களை தெரிவு செய்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்குள் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து தனது தொகுப்பாளர் பொறுப்பிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார்.
தற்போது இந்நிகழ்ச்சியினை சிம்பு தொகுத்து வழங்குகின்றார் என்று தகவல் வெளியானது. இன்று அதற்கான ப்ரொமோ காட்சியினை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.