tamil cinema : பிரேசிலில் இரண்டு ஆண் உறுப்புகளுடன் குழந்தை பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பிரேசிலில் இரண்டு வயது குழந்தையொன்று சிகிச்சைக்காக வந்துள்ளது.
அந்த குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது, இரண்டு ஆண் உறுப்புகள் இருந்தது தெரியவந்தது.
இதைப்பார்த்த மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர், 2 ஆண்டுகளாக பெற்றோர்கள் கவனிக்காமல் விட்டது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.
இதனை தொடர்ந்து குழந்தையை பரிசோதித்து பார்த்த போது, டைபிலியா எனும் அரியவகை பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
10 லட்சம் குழந்தைகளில் 1வருக்கு மட்டுமே இந்த அரியவகை பாதிப்பு ஏற்படும் எனவும், குழந்தை தாயின் வயிற்றுக்குள் வளரும் போது ஏற்படும் குறைபாடு காரணமாக இது ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கூடுதலாக உள்ள அந்த உறுப்பால் எந்தவொரு பயனும் இல்லை என மருத்துவர்கள் தெரிந்து கொண்ட பின்னர், அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர்.
இந்த வகை பாதிப்பு உள்ள நபர்களுக்கு பொதுவாக பின் நாட்களில் சிறுநீரக பிரச்னை ஏற்படும் என கூறப்படுகிறது.