29 May, 2023

உங்க போன்ல உள்ள அப் (app) பாஸ்வேட், போட்டோக்களை திருடுகிறது..! உடனே டெலிட் பண்ணுங்க‌

tamil cinema : கூகுள் பிளே ஸ்டோரில் பல ஆயிரம் செயலிகள் கொட்டி கிடக்கின்றன. பெரும்பான்மையான செயலிகள் இலவசமாக கிடைப்பதால் நாமும் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம்.

ஆனால் இத்தகைய செயலிகளால் நமது பாதுகாப்பு பறிபோகும் அபாயம் உள்ளது என்பதை உணராமல் இருக்கிறோம்.

அந்த வகையில் ப்ரேடோ என்ற நிறுவனம் craftsart cartoon photo tools என்ற செயலி குறித்து எச்சரித்துள்ளது.

நமது புகைப்படத்தை கார்டூனாக மாற்றித்தரும் இந்த செயலியை நாம் பயன்படுத்த பேஸ்புக் கணக்கு மூலம் லாகின் செய்ய வேண்டும். ஆனால் அந்த செயலி நமது கணக்கை ஃபேஸ்புக்கிற்குள் லாக் இன் செய்யாமல் அந்த தகவல்களை மற்றொரு சர்வருக்கு அனுப்பி விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நாம் கார்டூனாக மாற்றுவதற்கு அப்லோட் செய்யும் புகைப்படங்களும் திருடப்படும் என கூறப்படுகிறது. தற்போது 1 லட்சம் பேர் வரை டவுன்லோட் செய்துள்ள இந்த செயலி குறித்து புகார் அளிக்கப்பட்டாலும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அது நீக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.