tamil cinema : தாத்தாவை பிரிய மனம் இன்றி தேமி தேமி அழும் குட்டி தேவதையின் வீடியோ பலரையும் நெகிழ வைத்துள்ளது.
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் காரின் பின் சீட்டில் அழகிய உடை அணிந்து கொண்டு சிறுமி ஒருவர் அமர்ந்திருக்கிறாள்.
காருக்கு வெளியே நிற்கும் தாத்தாவுக்கு அந்த சிறுமி ஃபிளையிங் கிஸ் கொடுக்கிறார்.
அந்த குழந்தையின் தாத்தாவும் முத்தம் கொடுத்துவிட்டு குழந்தையை பார்த்து ஆனந்தமாக கை அசைக்கிறார்.
அந்த குழந்தையும் தாத்தாவிற்கு டாட்டா காட்டிவிட்டு அவரை பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடிக்கிறது. இந்த காட்சி இணையத்தில் பார்த்த பலரையும் கண்கலங்க செய்திருக்கிறது.
பலருக்கும் அவர்களது சிறு வயதில் தாத்தாவுடனான உறவை நினைவுபடுத்தும் விதமாகவும் இது அமைந்து இருக்கிறது.