29 May, 2023

ஒரு சாக்லெட் வேண்டுவதற்காக சிறுவன் செய்த செயல்..!

tamil cinema : வங்கதேசத்தில் உள்ள கோமிலா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் எம்மான் ஹுசைன். இவர் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி திரிபுராவின் சிபாஹிஜாலா பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் நீந்திக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வங்காளத்தை சேர்ந்தவர் என்பதும், நீச்சல் மூலம் இந்தியா வந்திருப்பதும், இந்தியாவுக்குள் நுழைவதற்கு போதிய ஆதாரம் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அப்போது தான் தனக்கு பிடித்தமான சாக்லேட்டை வாங்கிக்கொண்டு இந்தியா வந்ததாக கூறினார். இதையடுத்து அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த 15நாட்களுக்குள் இந்த சிறுவன் இந்தியாவிற்குள் வந்ததற்கு பின்னணியில் ஏதேனும் விஷயம் இருக்கிறதா என விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.