31 March, 2023

ஒரு வார காலத்திற்கு நாடு முடக்கத்திற்குள் கொண்டுவரப்படுமா..?

tamil cinema: நாட்டை ஒருவார காலத்திற்கு முழுமையாக முடக்கி நிலைமைகளை சுமுகமாக்குவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க திட்டம் வகுக்கப்படுவதாக அரச உயர்மட்டத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில், தற்போது நிலவுகின்ற விடயங்கள் குறித்து பல கலந்துரையாடல்கள் அரச தலைவரது மாளிகையில் இடம்பெற்றுள்ளன.

இதன்போதே, இது தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டது.

இருப்பினும் எவ்விதமான இறுதித் தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.