31 March, 2023

பெண்ணுடன் ஜாலியாக இருந்த கணவனை.. அந்த இடத்திலேயே கட்டிப்போட்டு வெளுத்த மனைவி !

tamil cinema : தெலங்கானாவில் வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவனை  பெண் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலுங்கான சூர்யாபேட்டையை சேர்ந்த மருத்துவர் பானு பிரகாஷ் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரியங்கா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் நகைகள் பணம் என வரதட்சணையைத் தவிர பானு பிரகாஷுக்கு இரண்டு வீடுகளை பிரியங்கா பெற்றோர் அளித்துள்ளனர்.

இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. காரணம் மருத்துவமனை கட்ட மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதோடு இரண்டு பிள்ளைகளின் தாயான தன் மனைவியை இரக்கமின்றி பானு பிரகாஷ் தனியே விட்டுச் சென்றுள்ளார். இதனால் பிரியங்கா தனது கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் மீண்டும் தான் திரும்பி வர வேண்டும் என்றால் கூடுதல் வரதட்சணை தரும்படி கணவர் பானு பிரகாஷ் துன்புறுத்துவதாக மனைவி பிரியங்கா குற்றம் சாட்டினார். இந்த வழக்கு நடந்து வரும் நிலையில் பானு பிரகாஷ்  தேவிகா என்ற மற்றொரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். இது சட்டப்படி குற்றம் என பிரியங்கா கூறியும் இதனை கண்டு கொள்ளாமல் பானு பிரகாஷ் இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பானு பிரகாஷ் மூன்று மாதங்களுக்கு முன்பு சூர்யாபேட்டைக்கு வந்து குடியேறினார். இதையறிந்த முதல் மனைவி தனது உறவினர்களுடன் சென்று பானு பிரகாஷையும், இரண்டாவது மனைவி தேவிகாவையும் தாக்கியுள்ளார். மேலும் அவர்களின் கைகளை கட்டியதோடு, இருவரும் அழுவதை கண்டு கொள்ளாமல் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பின் தனக்கும் தன் இரு குழந்தைகளுக்கும் அநீதி இழைத்த கணவன், 2வது மனைவி இருவரையும் ஊர்வலமாக அழைத்துச் சென்று போலீசிடமும் பிரியங்கா ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.