tamil cinema : சமீபத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்ட வேளையில், தோனியுடன் குடும்பம் நடத்துவதில் உள்ள கஷ்டங்களை அவர் சிஎஸ்கே அணியின் சமூக வலைதள பக்கம் மூலமாக பகிர்ந்து கொண்டுள்ளார் மனைவி சாக்ஷி.
அதில், அவர் தெரிவித்ததாவது, “தோனியுடன் வாழ வேண்டும் என்றால் பல விடயங்களை நாம் பொறுத்துக் கொண்டு, மாற்றிக் கொண்டு வாழ வேண்டும். நாம் ஒரு விளையாட்டு வீரரை திருமணம் செய்து கொண்டால் நிறைய பழகிக்கொள்ள வேண்டும்.
எப்போதுமே நாம் கேமரா முன் இருப்பது போன்று நிஜ வாழ்க்கையிலும் இருக்கமாட்டோம். எனவே பொதுவெளியில் நாம் சரியாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அதேபோல், பிரபலங்களின் மனைவியாக இருக்கும் போது நாம் நண்பர்களுடன் வெளியே சென்று வந்தால் கூட அதை தவறாக எண்ணி பல கருத்துக்களை பகிர்வார்கள்.
இப்படி பல கருத்துக்கள் பகிரப்படும் போதும் நாம் சகஜமாக எடுத்துக் கொள்ள தயாராக இருக்கவேண்டும். ஒருபுறம் இப்படி ஒரு பிரபலத்தின் மனைவியாக பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் கணவரால் நாட்டிற்கே பெருமை என்பதை என்ற போது நமக்கும் அது கூடுதல் பெருமையாக இருக்கும்.
தோனிக்கு மனைவியாக இருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சிதான். 40 வயதை எட்டியுள்ள தோனி இன்றளவும் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராகவும், அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.
இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அவர் ஓய்வு பெற்றாலும் தொடர்ச்சியாக சிஎஸ்கே அணியில் ஒரு முக்கிய பொறுப்பில் நீடிப்பார் எனவும் கூறியுள்ளார்.

tamil cinema