tamil cinema : கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த டாக்டர் ஷா நவாஸ் என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ஒரு நம்பரில் இருந்து ஹாய் என மெசெஜ் வந்துள்ளது. புது நம்பர் என்பரால் ஷா நவாஸ் அதற்கு பதிலளிக்காமல் இருந்துள்ளார். தொடர்ந்து அதே நம்பரில் இருந்து மெசெஜ் வர அதனை பார்த்த டாக்டருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
2 பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் யாரோ அனுப்பிருக்க சம்பந்தப்பட்ட நம்பரை தொடர்புக் கொண்டுள்ளார். முதலில் எதிர் முனையில் யாரும் பேசாத நிலையில் சிறிது நேரத்தில் அந்த எண்ணிலிருந்து ரூ.3 லட்சம் தராவிட்டால் போலீசில் புகார் செய்யப்படும் என தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து பயந்து போன டாக்டர் ஷா நவாஸ் உடனடியாக போலீசில் புகார் தந்தார். உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசார் பணத்தை தருவதாக ஒப்புக்கொள்வது போல கூறி குற்றவாளிகளை பிடிக்க திட்டமிட்டனர்.
சொன்ன நாளில் டாக்டர் ஷா நவாஸ், போலீசார் ஆகியோர் திருச்சூர் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்க சம்பந்தப்பட்ட பெண் வந்துள்ளார். அவரைச் சுற்றி வளைத்த போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காயங்குளத்தை சேர்ந்த நிஷா என்பது தெரியவந்தது. அதன்பிறகு நிஷாவிடம் பணத்தைக் கேட்டு மிரட்டிய அவரது தோழி நௌபியாவும் கைது செய்யப்பட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tamil cinema