30 May, 2023

ஓரினச்சேர்க்கைக்காக நாய்க்கு உரிமையாளர் செய்த செயல்..!

அமெரிக்காவில் தன்னுடைய நாயை ஓரினச்சேர்க்கையாளர் என கருதிய உரிமையாளர் காப்பகத்தில் விட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

வட கரோலினாவின் Albemarle நகரிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. சுமார் 4 முதல் 5 வயது மதிக்கத்தக்க Fezco என்ற நாயை விலங்குகள் காப்பகத்தில் விட்டுச் சென்றுள்ளார்.

தன்னுடைய நாய் ஓரினச்சேர்க்கையாளர் போன்று நடந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். அதாவது, ஆண் நாயுடன் விளையாடி மகிழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

இது விலங்கு இனங்களுக்கே உரித்தான குணம் என்றாலும், தவறாக எடுத்துக் கொண்டு உரிமையாளர் விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார்.

இந்த விடயம் வெளியே தெரியவர, பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

“அன்பான உரிமையாளர் உனக்கு நிச்சயம் கிடைப்பார், நல்ல விடயங்கள் மட்டுமே நடக்கும்” என நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்த நாய்கள் இப்படி செய்வது வழக்கமான ஒன்று தானே, இது உங்களுக்கு புரியவில்லையா? இந்த மனிதர்களை நினைத்தால் கோபம் கோமாக வருகிறது எனவும் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன.

Share