24 September, 2023

தனது குடிகார‌ உரிமையாளரை யாரும் நெருங்காது பாதுகாத்த நாய்..!

tamil cinema : குடிகாரர் ஒருவரின் செல்ல நாய் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நாயை வளர்க்கும் நபர் குடித்துவிட்டுச் சாலையில் அடிக்கடி ஆங்காங்கே தன்னை மறந்து மயங்கியும் விழுவார்.

ஆனாலும் எப்போதும் தன் நாய்க்கு நேரத்திற்கு உணவினைக் கொடுத்துவிடுவார்.இதனால் அந்த நாய் அவர் மேல் உயிரையே வைத்திருந்தது.

அவர் குடித்துவிட்டு வழியில் எங்காவது மயங்கி விழுந்தாலும் கூட அந்த நாய் அவருக்குப் பக்கத்திலேயே காவல் காக்கும். அவர் தன்னை மறந்து இருக்கும் நிலையிலும் அந்த நாய் தான் அவரது பாதுகாவலன்.

இப்படி அவர் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் போது நாய் அவரை எப்படி பாதுகாக்கின்றது என்பதை அருகில் இருந்த யாரோ காணொளி வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Share