29 May, 2023

எல்லாரோட மனசுலயும் இடம்பிடிச்ச தெரு நாய்க்கு கண்ணீர் போஸ்டர்..!

tamil cinema : தமிழகத்தில் தெரு நாய்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தேனியின் கம்பம் மெட்டு அருகே சாந்தன் பாறை, தொட்டிக்கானம் பகுதியில் சுற்றித் திரியும் நாய் ஜிம்மி.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குட்டியாக வந்த ஜிம்மியை, பொதுமக்கள் செல்லமாக பார்த்து வந்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு அதே தெருவில் 24 மணிநேரமும் சுற்றி காவல் காத்து வந்தது.

tamil cinema

tamil cinema

 

வேறு பகுதிக்கு செல்லாமல் அப்பகுதி மக்களுடன் செல்லமாக வளர்ந்த ஜிம்மி நேற்று திடீரென இறந்தது.

இதனையடுத்து அந்த நாயை பொதுமக்கள் தூக்கிச் சென்ற அடக்கம் செய்ததுடன், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து அப்பகுதி முழுவதும் ஒட்டினர்.

தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.