tamil cinema : செங்கிஸ்கான் உலகின் தலைசிறந்த ஆட்சியாளர்களில் ஒருவர்.சாதாரண குடும்பத்தில் பிறந்து அடிமையாக வளர்ந்த இவர் வரலாற்றின் மிகவும் வலிமையான படையை உருவாக்கி கிட்டதட்ட பாதி உலகத்தை தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்.
ஆனால் அதற்காக இவர்கள் செய்த பல இரக்கமற்ற செயல்கள் இவரை வரலாற்றின் கொடூரமான ஆட்சியாளர்களில் ஒருவராக மாற்றியது.
உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் செங்கிஸ்கான் பற்றிய சில உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
தனது மரபணுக்களை பல நூற்றாண்டுகளாக கடத்துவதன் மூலம் தனக்கென ஒரு அழியாத பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளார்.
DNA ஆராய்ச்சியின் சமீபத்திய கண்டுபிடிப்பு, மத்திய ஆசியாவில் மட்டும் 16 மில்லியன் ஆண்கள் அவரது சந்ததியினர் என்று மதிப்பிடுகிறது.
அவர் பல மனைவிகளைக் கொண்ட ஒரு சிறந்த காதலன். இதனால் பல சந்ததியினரைப் பெற முடிந்தது. மங்கோலியப் படைகள் கைப்பற்றிய நகரங்களின் மிக அழகான பெண்கள் அவருக்கு வழங்கப்பட்டது.
ஆசியா மற்றும் ரஷ்யாவின் சில ஆளும் வம்சங்களும் அவரது வழித்தோன்றல்களாக இருக்கலாம் என்று வாய்ப்புள்ளது..
500 மனைவிகள்
செங்கிஸ்கானுக்கு 500க்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்தனர்.
அதில் 6 பேர் மட்டுமே மங்கோலியர்களாக இருந்தனர்.
மற்றவர்கள் எதிரி நாட்டு மன்னர்களின் மனைவிகளாகவும், மகள்களாகவும் இருந்தனர்.
இருப்பினும், அவரின் முதன்மையான மனைவியாக போர்டே இருந்தார். அவருக்கு பிறந்தவர்களே மங்கோலிய ராஜ்ஜியத்தின் வாரிசாக கருதப்பட்டனர்.